4
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்றைய தினம் திங்கட்கிழமை காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு கரை ஒதுக்கியுள்ளது
இயந்திரமற்ற நிலையில் , குறித்த படகு கரையொதுங்கி இருப்பதனால் , கடத்தல்க்காரர்கள் பயன்படுத்திய படகாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , படகின் இலக்கத்தை கொண்டு , படகின் உரிமையாளரின் விபரத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.