இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும்.
பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது.
இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில் மின்சார விற்பனையை இந்திய அரசாங்கம் அண்மையில் அனுமதித்திருந்தாலும், இந்த விடயத்தில் ஒரு புதிய பரிமாற்ற வலையமைப்பு அவசியம் என்று தி இந்து பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விதிமுறைகளைப் பொருத்தவரை இலங்கைக்கு மின்சாரத்தை விற்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றாலும், அதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் அரசாங்கம் ஆலையில் இருந்து வாங்கிய மின்சாரத்திற்காக அதானி குழுமத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டது.
இன்னும் பல நூறு மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
எனினும், அந்த சரியான தொகை தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே சர்ச்சை நிலையுள்ளது.
இதற்கிடையில், பங்களாதேஷில் அதானி திட்டம் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
இப்போது, அதானி திட்டத்தை உள்ளடக்கிய ஏழு திட்டங்களின் விரிவான விசாரணைக்கு அங்குள்ள மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.