3
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட தேசிய அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் முறையே வெலிங்கடன், ஹாமில்டன் மற்றும் ஆக்லாந்தில் விளையாடப்படும்.
முதல் போட்டி இலங்கை நேரப்படி அதிகாலை 03:30 மணிக்கு (IST) தொடங்கும், மீதமுள்ள போட்டிகள் காலை 06:30 மணிக்கு (IST) தொடங்கும்.
இலங்கை அணி விபரம்:
சரித் அசலங்க – தலைவர்
பத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
நிஷான் மதுஷங்க
குசல் மெண்டீஸ்
கமந்து மெண்டீஸ்
ஜனித் லியனகே
நுவனிந்து பெர்னாண்டோ
துனித் வெல்லலாகே
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
ஜெப்ரி வெண்டர்ஷி
சமிந்து விக்ரமசிங்க
அஷித பெர்னாண்டோ
மொஹமட் சிராஷ்
லஹிரு குமார
எஷான் மலிங்க