கெபித்திகொல்லேவ பகுதியில் மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து ; ஒருவர் பலி

by adminDev2

கெபித்திகொல்லேவ பகுதியில் மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து ; ஒருவர் பலி அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதவிய வீதியில் உஸ்கொல்லேவ பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டி மீது மோதி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சிறிய ரக லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கெபித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்னேவ பிரதேசத்தில் அமைந்துள்ள திரையரங்கத்துக்கு அருகில் வசித்த 35 வயது நபர் ஆவார்.

சடலம் கெபித்திகொல்லேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கெபித்திகொல்லேவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்