கெசல்கமுவ ஒயாவை அளவீடு செய்ய முயன்றோர் விரட்டியடிப்பு காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஒயாவை அனுமதியின்றி அளவீடு செய்ய வந்த குழுவினர் தோட்ட நிர்வாகத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.
நோர்வூட் பிரதேச சபை மற்றும் தெரேசியா தோட்ட நிர்வாகம் ஆகியோரிடம் எவ்வித அனுமதியும் பெறாது சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வை மேற்கொள்ள கெசல்கமுவ ஒயாவைஅளவீடு செய்யும் பணியில் வெளியாரை அழைத்து வந்து மேற்கொண்ட போதே அந்த குழுவினர் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதேவேளை 27.09.2023ம் ஆண்டு பொகவந்தலாவ டின்சின் தொடக்கம் கிலானி வரை கெசல்கமுவ ஒயா சுத்தம் செய்யும் பணிக்கு முன்னாள் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட போதும் குறித்த பகுதியில் மாணிக்ககல் அகழ்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. சுத்தம் செய்யும் திட்டம் இடை நடுவில் இடை நிறுத்தப்பட்டது.
இருந்த போதிலும் குறித்த ஆற்றில் மாணிக்ககல் படிமங்களை அகழ்வதற்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையும் அனுமதியினை வழங்கி இடை நடுவில் அதற்கான அனுமதியை நிறுத்தியது நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் இடம் பெற்ற போதும் நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக கெசல்கமுவ ஒயாவில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளதாகவும் மாணிக்ககல் அகழ்வதற்கு கால அவகாசம் போதுமானது இல்லை எனவும் அதனால் அகழ்வு செய்யப்பட்ட மண்ணை முறையாக நிரப்பும் பணி இன்னும் நிறைவடையவில்லை அதன்படி மண்ணை கழுவி முடித்து அது தொடர்பான வேளை திட்டத்தை நிறைவு செய்யும் கோரிக்கையை முன்னெடுப்பதற்கு அதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு நோர்வூட் பிரதேச சபையின் செயலாளர் கே. முரளிதரன் 09.10.2024 அன்று கடிதம் ஒன்றை சுற்றாடல் அதிகார சபை.தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபை. தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு . நிலம் சுரங்க சுற்றுச்சூழல். ஆகியோருக்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே ஆற்றினை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் குறித்த பகுதியில் இருந்து உடனே அகற்றுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.