4
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போதை ஒழிப்பு நடவடிக்கை எனும் பேரில் ஆர்ப்பாட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இரண்டு லட்சம் மக்களுக்கு 15 மதுபான சாலைகள் யாழ்ப்பாணத்தில் ஆறு லட்சம் மக்களுக்கு 59 மதுபான சாலைகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அதிகம் இளைஞர்களும் அதிகம் பொருளாதாரமும் உள்ள நிலையில் அதைப் பற்றி கவலைப்படாத சிலர் கிளிநொச்சியின் மீது அதீத அக்கறை கொண்டவர்களாக ஆர்ப்பாட்டத்தை நடாத்த முற்பட்டுள்ளதாகவும் பின்னணியில் சுமந்திரன் தரப்பு இருப்பதாகவும் சிறீதரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தங்களுடைய மதுபாவனைகளை மறைத்து மக்கள் மீது பற்று கொண்டவர்களாக காட்டிக்கொள்ள முனைவதன் நோக்கத்தை புரிந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.