உடதும்பறை பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் உடதும்பறை பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் ஒன்று சேர்ந்து, கண்டி மஹியங்கனை வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது விவசாய உற்பத்திகளுக்கு வன விலங்குகளால் சேதம் ஏற்படுவதாகவும் குறிப்பாக குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, மர அணில் போன்றவை பாரிய சேதத்தை ஏற்படுத்துவதாகவும் இதற்கு விவசாய அமைச்சரும் விவசாயத் திணைக்களமும் விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கண்டி- மஹயங்கனை வீதியில் 35ம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்றதுடன் விவசாய அமைச்சும் தலையிட்டு, விவசாயத்தை நம்பி வாழும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு கோரினர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களது கோசங்களுக்கு அடிபணியாது எமக்கு நிரந்தர தீர்வுகாணப்பட வேண்டும், அப்படியல்லாத நிலையில் தாமும், நாடும் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.