by wp_fhdn

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் அமைந்துள்ள கடதாசி உற்பத்தி  தொழிற்சாலை உட்பட நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளை குறைந்த  விலைக்கு விற்பனை செய்வதற்கான செயற்பாட்டினை கடந்த கால அரசாங்கம் முன்னெடுத்திருந்தாகவும் ஆனால் அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் தம் மீது நம்பிக்கை வைத்து தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி உட்பட அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் மக்கள் வழங்கிய வர பிரசாதத்தை பெறுமதிவாய்ந்த ஒன்றாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்   மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருக்கின்ற கடதாசி உற்பத்தி தொழிச்சாலை உட்பட இந்த நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய கடந்த கால ஆட்சியாளர்கள்  முற்பட்டனர் எனவும், புதிய அரசாங்கத்தில் அது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாடு அபிவிருத்தி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்