4
முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருளால் பரபரப்பு ! on Monday, December 23, 2024
முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்று (22) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம பொதியை எடுத்து சோதனை நடாத்தியதில் அதில் 14.7 கிலோகிராம் கோடெக்ஸ் எனும் வெடிபொருள் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்தில் இருந்து மீட்டு முல்லைத்தீவு பொலிஸார் வெடிபொருளை கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.