மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

by wamdiness

சிறிலங்கா

மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது Posted on December 23, 2024 at 08:52 by நிலையவள்

3 0

கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம மற்றும் மீகொடை பொலிஸ் பிரிவுகளில் வைத்து சந்தேகநபர்கள் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்கை மற்றும் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

Next Post

தொடர்புடைய செய்திகள்