மீகொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மேலும் மூவர் கைது!

by wp_fhdn

ஹோமாகம மற்றும் மீகொடை பொலிஸ் பிரிவுகளில் வைத்து  குறித்த சந்தேகநபர்கள் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்கை மற்றும் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸ் நிலையம் மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கடந்த 19ஆம் திகதி மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இக்குற்றத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரையும் அதற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்தது.

குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்