மதுபானசாலைக்குள் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ! மூவர் காயம் , இருவர் விளக்கமறியலில்

by wamdiness

மதுபானசாலைக்குள் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ! மூவர் காயம் , இருவர் விளக்கமறியலில்

on Monday, December 23, 2024

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையொன்றுக்குள் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம்  இடம் பெற்றுள்ளது.

இதில் 45, 47, 37 வயதுடைய  மூவர் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை  பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய  20, 25 வயதுடைய இருவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சிலரை தேடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்