பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

by admin

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு! பொலன்னறுவை, பக்கமுன, புத்துருவயாய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பக்கமுன , புத்துருவயாய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, உயிரிழந்த வயோதிபர் தனது வீட்டிற்கு வெளியே சென்றுள்ள நிலையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்