6
தமிழகத்தில் பேருந்து இயக்கும் வேளையில் தொலைபேசியை பயன்படுத்த சாரதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொலைபேசியைப் பயன்படுத்தும் சாரதிகள் 29 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழகத்தில் பேருந்து சாரதிகள் தொலைபேசியில் உரையாடியவாறு பேருந்தினைச் செலுத்தி வரும் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. அத்துடன் இது தொடர்பான முறைப்பாடுகளும் தமிழக போக்குவரத்து ஆணையகத்திற்கு அதிகளவில் கிடைக்கப்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே தமிழக போக்குவரத்து அமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.