நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; போதைப்பொருட்களுடன் ஐவர் கைது! நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொட்டுவாதெனிய பகுதியில், 30 கிராம் 126 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாகெவிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனதா பொலவிற்கு அருகில் 05 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடைய மஹரகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
இதேவேளை, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கஸ் சந்தி பகுதியில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் 10 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய மாதுவ, கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்தவராவார்.
அத்தோடு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கிரு செவன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மற்றும் பணத்தொகையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்டவர்களிடமிருந்து 20 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 06 கிராம் 160 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 34,500 ரூபா பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரும் 39 வயதுடைய ஆணொருவரும் ஆவர்.
மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.