காதலர்களை தொந்தரவு செய்ய தயங்கிய பெங்குயின்

by smngrx01

காதலர்களை தொந்தரவு செய்ய தயங்கிய பெங்குயின் தென்துருவமான அண்டார்டிகாவின் அட்சியோ தீவுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சுற்றுலா சென்றது. அப்போது அந்த குழுவில் காதலர்களாக பழகி வரும் சியாரா மற்றும் கெவின் ஜோடி, கட்டி அணைத்தப்படி பனி பிரதேசத்தின் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர்.

அங்கே பெங்குயின் ஒன்று அந்த வழியாக கடந்து செல்ல முயன்றது. அப்போது காதலர்களின் நெருக்கத்தை தொந்தரவு செய்ய தயங்கி அமைதியாக காத்திருந்தது. இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர், பெங்குயின் குறித்து அந்த ஜோடியிடம் கூறினார்.

உடனடியாக அந்த காதல் ஜோடி விலகி நிற்க, இதனை தொடர்ந்து அவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பெங்குயின் காதல் ஜோடியை கடந்து சென்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 3 நாட்களில் 10½ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. பெங்குயினின் நாகரிகம் மற்றும் பொறுமை குணத்தை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்