கல்வியில் மாற்றம் ஏற்பட்டால் சமூகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் – கோடீஸ்வரன் எம்.பி

by wp_fhdn

கல்வியில் மாற்றம் ஏற்பட்டால் சமூகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் – கோடீஸ்வரன் எம்.பி கல்வியில் ஒரு மாற்றம் ஏற்படுமென்றால் அது சமூகத்திலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று  பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை விவேகானந்தா பாலர் பாடசாலையின் ஆண்டு கலைவிழா அண்மையில் சந்தான ஈஸ்வரர் மண்டபத்தில் பால பாடசாலையின் ஆசிரியர் சரோஜினி சாந்தகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தொடர்ந்தும் தனது உரையின்போது,

உலகத்திலே பாரிய ஒரு  மாற்றத்தை உண்டு பண்ணுகின்ற ஒன்றாக கல்விதான் காணப்படுகிறது.

கல்வியினால்தான் சகலதையும் சாதித்துக்கொள்ள முடியும். ஒன்று இரண்டு அல்ல அதிகளவான காரியங்களை இந்த கல்வியினால்தான் சாதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால், கல்வி என்பது மிகவும்  சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கின்றது. அந்த கல்வியை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் நீங்கள் பிள்ளைகளுக்கு சரியான முறையில் கல்வியை கொடுத்தால் நிச்சயமாக சமூகத்திலே பாரிய மாற்றம் ஏற்படும். அது மட்டுமல்ல, உங்களை அந்த பிள்ளைகள் தரப்படுத்தும் சிறந்த கல்வியை கொடுக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கும் இருக்கின்றது.

அதேபோல் இந்த பிள்ளைகளை அண்டி வாழ்கின்ற சமூகத்துக்கும் சிறந்த கல்வியை கொடுக்கின்ற அந்தக் கடமை இருக்கின்றது.

ஆகவே ஒரு சிறந்த கல்விதான் உலகத்திலே சகலதையும் சாதிக்கக்கூடிய தன்மையும் பக்குவமும் கொண்ட கல்வி என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. இன்று இந்த நாடு பொருளாதார ரீதியாக  பின்னடைந்திருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த நாட்டிலே இருக்கின்ற அரசாங்கமானது இதை தக்க வைத்துக் கொள்வதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

விசேடமாக நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மந்த நிலையிலே இருக்கின்றது. நாடு மிகவும் பாதாள நிலைக்கு தள்ளப்படக்கூடிய  சூழ்நிலை காணப்படுகிறது. அந்த வகையிலே இந்த சவால்களை   நாங்கள்  எதிர் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டுமென்றால்,

கல்வி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

கல்வியிலே நாம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

இங்கே இருக்கின்ற  சிறார்கள் தங்களது செயற்பாடுகளை திறமையாக  திறம்பட செய்திருக்கிறார்கள், அவர்களுக்காக நல்ல பழக்கத்தை, பண்புகளை நாங்கள் ஊட்டவேண்டும் அப்படி நாங்கள் நல்ல பழக்கங்களை பண்புகளை ஊட்டுகின்ற பொழுதுதான் இந்நாட்டிலே நாங்கள் சிறந்த முறையிலே கல்வியை பெறக்கூடிய அந்த சூழ்நிலை காணப்படும்.

எனவே இந்த பிரதேசங்களில் கூடுதலாக போதைவஸ்து அதே போல் வேற  முறையற்ற செயற்பாடுகள் அதாவது சட்டத்துக்கு முரணாக செயற்படுகின்ற செயற்பாடுகள் இந்த பகுதியிலே மிகக் கூடுதலாக வலுப்பெற்று இருக்கின்றது. இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் எங்களது எதிர்கால  பிள்ளைகள் நன்றாக சிறப்பாக வளர வேண்டுமென்றால்  போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்,  அதேபோல் போதைப் பொருட்களை விற்கின்றவர்களை நாங்கள் அடையாளம் கண்டு உரிய அதிகாரிகளுக்கு உரிய நேரத்திலே அறிவிக்க வேண்டிய கடமை இங்கே இருக்கின்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது.

நாங்கள் எங்களது பிள்ளைகளை எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே, நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாங்கள் விழிப்பாக இருக்கின்ற பொழுதுதான் எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரும்புகின்றேன்.

தமிழர்கள் நாங்கள் ஒரு தனித்துவமான இனம். எங்களது இனத்தின் தனித்துவத்தை பாதுகாக்கின்ற கடமை  எங்களிடம் இருக்கின்றது. நாங்கள் பாரம்பரியமாக வளர்த்தெடுக்கப்பட்ட  ஒரு இனம். தமிழ் என்பது உலகத்தின் முதன்மையான மொழி மூத்த மொழி, புராதன மொழி,செம்மொழி  இப்படியான மொழியை  பேசுகின்ற நாங்கள் தனித்துவமான மக்களாக  செயல்பட வேண்டும்.  அது அரசியலாக இருக்கட்டும் அல்லது பொருளாதார ரீதியான விடயங்களாக இருக்கட்டும் அல்லது  கல்வி ரீதியான விடயங்களாக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தனித்துவமாக எங்களுக்குள்ளான  தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். நாங்கள் தமிழர்களின் தனித்துவத்தை மொழியின் அடையாளத்தை எப்போது பாதுகாக்கின்றோமோ அப்பொழுதுதான் எமது இனம் ஏனைய இனத்தவர்களால் பாதிக்கப்படாத ஒரு  நிலைத்து நிற்கக்கூடிய இனமாக இருக்கும் என்பதை இவ்விடத்தில் தெளிவாக கூற விரும்புகின்றேன்.

அதேபோல் எங்களது எதிர்கால சந்ததிகள் இந்த பிள்ளைகளுக்கும் எங்கள் கலாச்சாரத்தை, தமிழை எங்களது பண்பாடுகளை, எங்களது அடையாளத்தை நிலை நிறுத்தக்கூடிய அனைத்து வழிகளையும் நீங்கள் செய்ய வேண்டும்

இந்நிகழ்விலே கலந்து கொண்டிருக்கின்ற  இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த முன்பள்ளி ஆசிரியர்களே, அதேபோல் இந்நிகழ்விலே கலந்து கொண்டிருக்கின்ற எனது அன்பு சிறார்களே மற்றும் இங்கு வருகை தந்திருக்கின்ற எங்களது மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம் அண்ணன் அவர்களே, அதேபோல் எங்களது கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவர் அவர்களே அதேபோல் தம்பி துரைராஜ் அவர்களே, மற்றும் இங்கு வருகை தந்திருக்கின்ற பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் மாலை வணக்கத்தை தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

விசேடமாக இந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இங்கே இருக்கின்ற பிள்ளைகளுக்கு சரியான முறையில் அந்த கற்பித்தலை சரியாக செய்திருக்கின்றார்கள். அவர்களுக்காக எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்வுகளை சிறப்பாகச் செய்த அன்பு சிறார்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறார்கள் மிக அழகாக தனது செயற்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். அவர்களை பார்க்கின்ற பொழுது உண்மையாக எங்களது மனதிலே ஒரு ஆத்ம திருப்தி வருகிறது.

இந்த பிள்ளைகளை பார்க்கின்ற பொழுது அவர்கள் நிச்சயமாக எதிர்காலத்திலே பெரிய  இடத்திலே நல்ல நிலைமையிலே வகிக்கின்ற  திறமை காணப்படுகிறது.

இந்த நாட்டை வளப்படுத்தக் கூடியவர்களாக  ஒவ்வொருவரும் நல்ல துறையிலே அவர்கள் வளர வேண்டும் என்று  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்