இந்தாண்டு சட்டவிரோத மின்வேலிகளினால் 50 யானைகள் பலி!

by wamdiness

இந்த வருடம் (2024) இதுவரை அங்கீகரிக்கப்படாத மின் வேலிகள் மற்றும் சட்டவிரோதமான மின்சார கம்பிகளில்  மின்சாரம் தாக்கி சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஏற்கனவே தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

காட்டு யானைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும், மின்சாரக் கம்பிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின் வேலிகளில் அமைக்கும் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை அளிக்குமாறு மக்களை வலியுறுத்துவதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

0112118767 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது அவசர அவசர தொலைபேசி இலக்கமான 1987 ஊடாக இது தொடர்பில் உடனடியாக இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்