மாவை சேனாதிராசா தமிழரசுக்கூட்டத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாமதமாகவே வருவார்.ஆனால் கிழக்கிலிருந்து கட்சிக்காரர்கள் நேரகாலத்துடனேயே வருவார்கள்.அவ்வாறு தான் தமிழரசு கட்சி தலைமையின் பொறுபற்ற தன்மை இருந்ததாக தெரிவித்துள்ளார் இரா.சாணக்கியன்.
இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என தெரிவித்ததாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு சம்பந்தன் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தை சந்திக்கும் படி என்னை அறிவுறுத்திய நிலையில் இப்படியாகத்தான் நான் கட்சிக்குள் வந்தேன்.
தற்போது கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார் என்பதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது சகல கதவுகளும் மூடப்பட்ட அறையில் தான் நடைபெற்றது.
இருப்பினும், மாவை சேனாதிராஜாவின் வருகையின் போது கதவு திறக்கப்பட்டது அந்த வேளையில் பேசப்பட்ட விடயங்கள் மாத்திரமே வெளியே நின்ற ஊடகவியலாளர்களுக்கு கேட்டது அவை செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
எனினும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்திற்கு கொழும்பு, அம்பாறை, திருக்கோயில் உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து அதிகாலை நான்கு மணிக்குப் புறப்பட்ட உறுப்பினர்கள் 10 மணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள் ஆனால், தலைவர் மாவை சேனாதிராஜா வரவில்லை அது வழமையாக நடப்பது தான்.
நாங்கள் எல்லோரும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவே, இம்முறை மிகத் தாமதமானதால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினேன் அதற்கு சிவமோகனால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதெனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.