நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி

by wp_fhdn

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கட் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சரித் அலங்க தலைமையிலான இலங்கை அணிக்கு குஸல் ஜனீத் பெரேரா மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

12 மாதங்களின் பின்னர் குஸல் ஜனீத் பெரேரா இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடவிருக்கின்றார்.

வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கிரிக்இன்போ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஏனைய இரண்டு ஒருநாள் போட்டிகளும் கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்