மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு – வர்த்தமானி வௌியானது !

by sakana1

மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு – வர்த்தமானி வௌியானது ! on Sunday, December 22, 2024

அனைத்து மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மருத்துவ நிபுணர்கள், தர மருத்துவ மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ நிர்வாக தரத்திலுள்ள எல்லா அலுவலர்கள், பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ தொழிலாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்