திருக்கோவில் – ரூபஸ்குளம் பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது ! on Sunday, December 22, 2024
திருக்கோவில் – ரூபஸ்குளம் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்கேதநபர் 44 வயதுடைய தம்பிலுவில் 02 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பூவரசங்குளம் – வேளன்குளம் பிரதேசத்தில் பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் உள்ளாட்டு துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வேளன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது