5
தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க முடிவு ! on Sunday, December 22, 2024
எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரை கோபுரம் திறந்திருக்கும்.
மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை தாமரைக் கோபுரம் திறந்திருக்கும்.
You may like these posts