ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தையில் புகுந்த கார் – இருவர் பலி; 68 பேர் காயம்

ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டெபர்க் என்ற நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி போடப்பட்டிருந்த சந்தையில் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது.

அப்போது அந்த கூட்டத்தின் உள்ளே ஒரு கார் வந்து மோதியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 68 பேரில் 15 பேர், மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் அறிக்கை தெரிவித்துள்ளனர்.

“இந்த சம்பவத்தில் 50 வயதான சௌதி அரேபியா குடிமகன் ஒருவர் சந்தேகத்திற்குரிய நபர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 2006-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து மருத்துவராக தற்போது பணியாற்றி வருகிறார்”, என்று சாக்சனி-அன்ஹால்ட் மாகாணத்தின் முதல்வரான ரெய்னர் ஹேசெலோஃப் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுவரை நடந்த ஆரம்ப கட்ட விசாரணையில் இந்த நபர் தனியாக செயல்பட்டதாகவே தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

முழு விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.