9
இரான்: ‘பாலியல் துன்புறுத்தல்கள் இங்கு சகஜம்’, கட்டாய ஹிஜாபுக்கு எதிராக சிறை சென்ற பெண்ணின் கதை
இரான்: ‘பாலியல் துன்புறுத்தல்கள் இங்கு சகஜம்’, கட்டாய ஹிஜாபுக்கு எதிராக சிறை சென்ற பெண்ணின் கதை
இந்தக் காணொளியில் வருவது, இரானின் எவின் சிறையில் உள்ள பெண்களின் உண்மைக் கதை. கட்டாய ஹிஜாபுக்கு எதிரான 2022 போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்களின் கதைகள் பல நம்பகமான ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டவை.
எவின் சிறையில் பல பெண்கள் தண்டனைக்காக, வாழ்வா- சாவா என்ற நிலையில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு செவ்வாயும், மரண தண்டனைக்கு எதிராக பெண்கள் போராடுகிறார்கள். ‘மரண தண்டனை கூடாது’ என்ற அவர்களது பிரசாரம் சிறையின் சுவர்களைத் தாண்டி உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.