15
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்த்திசையில் காரை செலுத்தியவர் கைது ! on Friday, December 20, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன சேவை நிலையத்துக்கருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில், காலி நோக்கி எதிர்த்திசையில் காரை செலுத்திச் சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி காரை நிறுத்திவிட்டு இறங்கி கழிவறைக்குச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த நபர் காரை எடுத்துக்கொண்டு, இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நெடுஞ்சாலையில் பயணித்த மற்றொரு காரின் பாதுகாப்பு கெமராவிலும் பதிவாகியுள்ளது.