நிதி மோசடி தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவரால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தான் எவ்வகையிலும் பணத்தை பெற்றிருக்கவில்லையெனவும் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னராக ஊடக சந்திப்பில் திலீபன் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் நிதி மோசடி விசேட பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச காணியொன்றை வழங்குவது தொடர்பில் பொதுமகன் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றி தேர்தலில் போட்டியிட்ட திலீபன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.எனினும் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில் அவர், கட்சியின் சகல பதவிகளையும் இராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் அறிவித்திமிருந்தார்.