நைஜீரியாவின் தென்மேற்கு நகரமான இபாடானில் கிறிஸ்துமஸ் கேளிக்கை நிகழ்வில் ஏற்பட்ட நொிசரில் 35 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த இடத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடியிருந்ததாகவும், நிகழ்வை ஆரம்பிப்பதற்கு பிரதான அமைப்பாளர்கள் வருகை தந்த போது இந்த நொிசல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
5,000 குழந்தைகளில் ஒவ்வொரு பேருக்கும் 5,000 நைரா (சுமார் $3) உதவித் தொகை வழங்குவதாகவும், பங்கேற்பாளர்களுக்கு இலவச உணவை வழங்குவதாகவும் அமைப்பாளர்கள் உறுதியளித்ததால், அவர்கள் கொஞ்சம் பணமும் உணவும் கிடைக்கும் என்பதால் அங்கு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்விற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்த முக்கிய அமைப்பாளரான நவோமி சிலேகுனோலா உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.