7
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் ! on Friday, December 20, 2024
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண சிவில் உடையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.