இந்திய எண்ணெய் குழாய் அமைப்பு பற்றிய அராசங்கத்தின் அறிவிப்பு ! on Friday, December 20, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, இலங்கையில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு எட்டப்பட்டது என்றார்.
அதை விடுத்து இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார் .