11
பளையில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது
கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.