10
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்தொழிலாளர்களினதும், விளக்கமறியலை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வழக்கு இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 கடற்தொழிலாளர்களும், சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்