மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; ஐவர் கைது ! on Thursday, December 19, 2024
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை வீதி மற்றும் மெலிபன் சந்தி ஆகிய பகுதிகளில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் இருந்து ஐந்து பெண்கள் நேற்று புதன்கிழமை ( 18) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்லை, பெந்தர மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 24 முதல் 43 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.