கோழிகள் மற்றும் முட்டைகள் திருடிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் இருந்த நைஜீரியர் ஒருவருக்கு அவருக்கு மன்னிப்பு வழங்குவதாக ஓசுன் மாநில ஆளுநர் உறுதியளித்தார்.
கோழிகள் மற்றும் முட்டைகள் திருடிய குற்றத்திற்காக 2010 ஆம் ஆண்டில், செகுன் ஓலோவூகெரேயும் (Segun Olowookere) மொரகின்யோ சண்டேயும் (Morakinyo Sunday) கைது செய்யப்பட்டனர். அப்போது செகுன் ஓலோவூகெரேவுக்கு 17 வயது.
அவர்கள் ஒரு காவல்துறை உறுப்பினரின் வீட்டைத் தாக்கியதாகவும், ஒரு பழைய நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு கத்தியை வைத்திருந்ததாகவும் அவர்கள் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கோழிகள் மற்றம் முட்டைகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், ஓசுனில் உள்ள மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜிடே ஃபலோலா திருடிய குற்றத்திற்காக இருவரையும் தூக்கிலிட்டு மரண தண்டனை வழங்க உத்திரவிட்டார்.
அந்த நேரத்தில் நைஜீரியாவில் இந்த வழக்கு பொதுமக்களின் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அங்கு தண்டனை மிகவும் கடுமையானது என்று பொதுமக்கள் கூறினார்கள்.
இரண்டு பேரும் பின்னர் லாகோஸ் மாநிலத்தில் உள்ள கிரிகிரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காத்திருக்கும் மரணதண்டனை பிரிவில் வைக்கப்பட்டனர்.
ஓலோவூக்கரே மன்னிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் அடெமோலா அடெலேக் உத்தரவிட்டார்.
இந்த இளைஞனுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் பணியைத் தொடங்க நீதி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் என ஆளுநர் தெரிவித்தார்.
இருப்பினும், ஓலோவூக்கரேவுடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட மொராக்கினியோ பெயர் குறிப்பிடப்படாததால் அவரது நிலை என்னவென்று தெரியவில்லை.
பல ஆண்டுகளாக, ஓலோவூகெரேவின் பெற்றோர், மனித உரிமைக் குழுக்கள் மற்றும் நைஜீரியர்கள் அவரது விடுதலைக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அவர் தங்களுக்கு ஒரே குழந்தை என்றும், அவரை மன்னிக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
ஓலோவூகெரே 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடுதலையாவர் என செய்திகள் கூறுகின்றன.
நைஜீரியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது 3,400 க்கும் அதிகமானோர் மரணதண்டனைக்காக காத்திருக்கின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.