13
வியற்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியட்நாம் பொது பாதுகாப்பு அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.
நேற்றிரவு 11:00 மணிக்கு கஃபேயில் தீ பற்றியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மூன்று மாடி கஃபேவின் தரை தளத்தில் பெட்ரோல் பயன்படுத்தி தீ மூட்டியதை அந்த நபர் ஒப்புக்கொண்டார். அவர் ஏழு வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எந்த விதமான மீட்பு முயற்சியும் செய்ய முடியாத அளவுக்கு தீயானது ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக எரிந்தது.