கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் பின்னணியில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம் ; இறந்தவர் பெயரில் உரமானியம் ! on Wednesday, December 18, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் ஒருவரின் பின்னணியில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
விவசாயி ஒருவரின் காணியை இறந்தவரின் பெயரில் பதிந்து பசளை மற்றும் உர மானிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன.இதற்கு உடந்தையாக விவசாயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இருந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.இது குறித்து யாழ்,ஊடக மையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ஊடக சந்திப்பை நடத்தி விபரங்களை வௌியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயி மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி தம்புகாமத்தில் எங்களுக்கு சொந்தமான காணியை, எவ்வித ஆவணமுமின்றி மாற்றிக் கொடுத்துள்ளனர்.எமது காணிஇறந்தவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகிழங்காடு கமக்கார அமைப்பினர் இதுபற்றி தமக்கு தெரியாது என்கின்றனர்.
விவசாயம் செய்யப்படாத காணிகளுக்கு பசளை மானியம் என்பன வழங்கப்பட்டுள்ளது. 2019 முதல் இக்காணியில் பயிர் செய்கை மேற்கொள்ளும் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நடந்த மோசடிகள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். பொலிஸாருக்கும் கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்துக்கும் முறையிட்டும் பலனில்லை. இது தொடர்பில் வழக்கு பதிவுசெய்ய தயாராக இருக்கின்றேன். ஆவண மோசடி சம்பந்தமாக மான நஷ்ட ஈட்டு வழக்கை பதிவுசெய்யவுள்ளேன். இதில் பாதிக்கப்பட்டது நாங்களே. சட்டம் சொல்கின்ற விடயம் எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்திலுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதை நீதிமன்றத்திடம் விடுங்கள்