பூநகரி அரசபுரம் கிராமத்தில் பொதுமக்களிற்கு சொந்தமான 12 ஏக்கர் காணி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு குடிநீர் கிணறு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
உலக தரிசனம் நிறுவனத்தினால் அப்பகுதி மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன் கட்டி வழங்கப்பட்ட பொது குடிநீர் கிணறு இராணுவத்தினால் அதன் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அடைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை மக்கள் இராணுவ முகாமின் வாசலில் நீர் கொள்கலன்களை அடுக்கி வரிசையாக நின்று நீரினை பெறுதல் வேண்டும். இருபது லீட்டர் குடிநீர் மட்டுமே நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின் நெருக்கடி நிலை குறித்து எவரும் கண்டுகொள்ளவில்லையென கூறப்படுகின்றது.
இதனிடையே இராணுவ முகாம் அமைந்துள்ள வளாகத்திற்குள் 34 டிப்பர் வாகனங்களில் சுமார் 1000 தடவைகள் மண்ணை இராணுவத்தினர் கடந்த மாதம் விற்று உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.