ஹோட்டல்களில் விசேட சோதனை ! on Wednesday, December 18, 2024
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உள்நோயாளிகள் அதிகளவில் உணவு பெறும் பல ஹோட்டல்களில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உகுஸ்ஸா இன்று (17) கண்டுபிடித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பலர் புஞ்சி பொரளை பிரதேசத்தில் உள்ள கடைகளிலேயே உணவுகளை பெற்று செல்கின்றனர்.
சில கடைகளில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்வதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதன்படி பொரளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று அந்த இடங்களை சோதனையிட்டனர்.
இந்த செயற்பாட்டில் “உகுஸ்ஸா”வும் இணைந்திருந்தது.
அங்குள்ள ஒரு கடையில், மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொடுக்க முடியாத அளவிலான உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர்.
இதேவேளை, கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் உள்ள தற்காலிக உணவு விற்பனை நிலையங்களையும் பொது சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட்டனர்.
அங்கு, பானங்கள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்களானது, மனித பாவனைக்கு தகுதியற்ற வகையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.