பவள விழா காணும் இலங்கை தமிழரசுக் கட்சி !

by guasw2

பவள விழா காணும் இலங்கை தமிழரசுக் கட்சி ! on Wednesday, December 18, 2024

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 75 வது ஆண்டு நிறைவு விழா 18.12.2024 ஆம் திகதி இன்று மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச கிளைத்தலைவர் சி. புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் திரு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கருத்துரைகளும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதேசக்கிளை செயலாளர் பொ. நேசதுரை,பாராளுமன்ற வேட்பாளர் அ.கருணாகரன் உட்பட கட்சியின் மகளீரணி,இளைஞரணி,வட்டாரக்கிளை பிரமுகர்களென ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்