நாடு திரும்பினார் ஜனாதிபதி !

by admin

நாடு திரும்பினார் ஜனாதிபதி ! on Wednesday, December 18, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தில் இணைந்தார். அங்கு இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்