சந்திவெளியில் இரத்ததான முகாம்

by guasw2

சந்திவெளியில் இரத்ததான முகாம் on Wednesday, December 18, 2024

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்ற தொனிப் பொருளில்  இரத்ததான முகாம்  இன்று(18) புதன்கிழமை சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில்  இடம்பெற்றது.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  இரத்த வங்கி பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க அபயம் அமைப்புடன் இணைந்து சந்திவெளி பிரதேச வைத்தியசாலை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. 

 இதன்போது 70 பேர்  கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர். குறித்த குருதியை கொடையாளர்களிடமிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  இரத்த வங்கி பிரிவினர் பெற்றுக் கொண்டனர்.

 அபயம் அமைப்பினரால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட முதலாவது இரத்ததான முகாம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்