சபாநாயகர் ராஜினாமா – வர்த்தமானி வௌியானது ! on Tuesday, December 17, 2024
அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அசோக ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு தற்போது எதிர்க்கட்சியில் இருந்தும் ஒருவரை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உரிய முன்மொழிவை கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவும் நேற்று பிற்பகல் கூடி புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.