பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது !

by adminDev

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது ! on Tuesday, December 17, 2024

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தின் வவுனியா,மல்லாவி,அடம்பன் மற்றும் உளுக்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்பாணம் சாவகச்சேரி,பியகம மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட 37 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்