புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணை !

by sakana1

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணை ! on Monday, December 16, 2024

இம்முறை நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வௌியான நிலையில், மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறு கோரி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்க தீர்மானித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் முழு கவனம் செலுத்தியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பெசிர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் முக்கியமான பரீட்சை எனவும், பரீட்சையில் வழங்கப்படும் ஒவ்வொரு சித்தியும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, கிராமப்புற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கு இதுவே ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இந்தத் பரீட்சையில் ஏதேனும் அநீதி நடந்தால், அது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்துக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்