பேச்சு மூச்சில்லை!:டெல்லியில் அனுர!

by guasw2

வடகிழக்கினை இந்தியா தனது மாகாணங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளதாக இதுவரை குற்றஞ்சாட்டிய ஜேவிபி தற்போது அடக்கி வாசிக்க முற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட நிலையில்  புதிதாக ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு  சேவை தொடங்கப்படும் என நாங்கள் முடிவு செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியுடனான கூட்டு ஊடக சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் மோடியுடனான கூட்டு ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்