தமிழர்களிற்கு போதை பிரச்சினையே முதல் பிரச்சினையாம்?

by guasw2

இலங்கை ஜனாதிபதி டெல்லியில் தங்கியுள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வுழமை போலவே அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்த்தால் இனப்பிரச்சினை தீருமெனவும் சந்திரசேகரன் விளக்கமளித்துள்ளார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கு நான்கு வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டுமென்று நாங்கள் கூறுகின்றோம்.

முதலாவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவுள்ள பிரச்சினைகளாக வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, போதைவஸ்த்துப் பாவனை என்பன காணப்படுகின்றன.

முதலில் அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான தீர்வை வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஆகவே இவற்றில் இருந்து நாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குக்கென தனித்தனியாக இருந்து வந்துள்ளது.

எனவே முதலாவதாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்” என சந்திரசேகரன்; தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்