ஆற்றில் மிதந்த பையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு !

by sakana1

ஆற்றில் மிதந்த பையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ! on Monday, December 16, 2024

மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றுப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிலர் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சாக்குப்பை ஒன்றைச் சோதனையிட்டுப் பார்த்த போது, சாக்குப்பையினுள் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்