விவசாயத்துறைக்கு வர்த்தகத்துறையின் பங்களிப்பு ! on Sunday, December 15, 2024
விவசாயத்துறைக்கு வர்த்தகத்துறையின் பங்களிப்பு .
விவசாயத்துறை இலங்கை மக்களுக்கான வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகின்ற போதிலும் விவசாயிகளை விட இடைநிலை வியாபாரிகள் அதிகளவான இலாபம் பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பில் கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளே மக்களுக்கு பிரதான வாழ்வாதார மூலமாக காணப்படுகின்றது இருந்த போதிலும் அவர்களின் வளர்ச்சி நிலையை குன்றிய வண்ணமே காணப்படுகின்றது.
ஆராய்ச்சியின் மத்தியில் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான சிறந்த களம், நிதி வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பல காரணங்கள் இந்நிலைமைக்கு காரணமாக உள்ளது விவசாய துறைகளில் பல இளைஞர்கள் பட்டம் பெற்று வருகின்ற போதிலும் விவசாயத்துறைக்கு அவர்களது நேரடி
பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றதுகாரணம் விவசாயத்துறையின் அறிவைப் பெற்றுள்ள போதிலும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறையை அதனுடன் இணைக்காது. இவ் விளைவுக்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு வலு சேர்ப்பது குறைவாக காணப்படுகின்றது. இடைத்தரகர்கள் அப்பொருட்களுக்கு வலு சேர்த்து பன் மடங்கு விலைகளை அதிகரித்து அதிக இலாபம் பெறும் நிலை காணப்படுகின்றது. இடைத்தரகளின் தாக்கத்தின் காரணமாக இறுதி நுகர்வோருக்கு அதிக விலை உடலுத்தப்படுகின்றதும் ஒரு பாதகமான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான தாக்கங்களின் காரணமாக விலை அதிகரிப்பு, விவசாய பொருட்களின் இறக்குமதி மற்றும் விவசாயிகளின் வறுமை போன்ற சவால்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் பெறுமதி சேர்க்கப்பட்ட தங்களது விவசாய உற்பத்தி பொருட்களைவிவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு சேர்க்கும் போதுஇடைத்தரகர்களின் தலையீடு இன்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்யலாம்இச்செயற்பாட்டின் மூலம்விலையேற்றத்தை குறைக்கலாம் அத்துடன்போசாக்கான உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான அக்க கேள்வி அதிகரிப்பதுடன் இதனால்விவசாயத்தில் முழுமையாகவும் பகுதி அளவிலும்ஈடுபட முன்பெறும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எமது பாரம்பரிய தொழில் விவசாயமாக காணப்பட்ட போதிலும்மேலைத் தேய நாடுகள் விவசாய துறையில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையை காணப்படுகின்றது.இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோதுதொழில்நுட்ப முன்னேற்றம் முக்கிய காரணமாக காணப்பட்டாலும்அவ் விவசாயிகளுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்வதற்கான அனுபவமும் அறிவும் காணப்படுகின்றதுஆனால் எமது
பிரதேசத்தை பார்க்கும்போதுஏற்றுமதியை மேற்கொள்ள போதுமான அளவு வழிகாட்டலும் அறிவும் குறைவாக உள்ளது என்பது புலப்படுகிறது.
இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு ஏற்றுமதி வியாபாரம்,பொருட்களுக்கு வலு சேர்த்தல் மற்றும் நேர் வியாபாரம் செய்வதற்கான விழிப்புணர்வும் வழிகாட்டல்களும் வழங்குவது விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்பது உறுதியாகின்றது .
THAVARASA SHALUKSANA
EASTERN UNIVERSITY OF SRI LANKA