விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இயந்திரம் மோதி பண்ணை பரிசோதகர் பலி !

by guasw2

விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இயந்திரம் மோதி பண்ணை பரிசோதகர் பலி ! on Sunday, December 15, 2024

பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேவெல கால்நடை பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிசமன்கம, அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பண்ணை பரிசோதகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்