தும்மலசூரியவில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் – உயிரிழந்தவர் பெண்ணா?! – பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி ! on Sunday, December 15, 2024
தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, உயிரிழந்த நபர் ஒரு பெண் என தெரியவந்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதி தும்மலசூரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 39 வயதுடைய இளைஞனின் சடலம் தொடர்பில் குளியாப்பிட்டிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில், கொல்லப்பட்ட நபர் ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் உள்ள பெரிய தோட்டமொன்றில் சில காலமாக வசித்து வந்ததாகவும் அவர் கைவிடப்பட்ட நாய்களை பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.